கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்!
ADDED : 10 minutes ago
விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் 'சிறகடிக்க ஆசை' . இந்த தொடரில் மனோஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்ரீ தேவா.
தற்போது இவர் கதாநாயகனாக புதிய படத்தில் அறிமுகமாகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பரூக் அப்துல்லா இயக்கத்தில் ஸ்ரீ தேவா, பவித்ரா வெங்கடராமன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'ஓடிபி'. யாழ் மீடியா கிராப்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சூர்யா ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை இன்று பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.