உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'விடாமுயற்சி' முதல் பார்வை : விதவிதமான விமர்சனங்கள்

'விடாமுயற்சி' முதல் பார்வை : விதவிதமான விமர்சனங்கள்

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், த்ரிஷா நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. அப்படத்திற்காக இதுவரையிலும் எந்த ஒரு போஸ்டரையும் வெளியிடாமல் இருந்தார்கள். அவ்வப்போது மேக்கிங் வீடியோக்களை மட்டும் வெளியிட்டு வந்தார்கள்.

இந்நிலையில் நேற்று இரவு படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார்கள். ஒரு நெடுஞ்சாலையில் கையில் ஒரு பேக் உடன் அஜித் நடந்து வரும் போஸ்டரை வெளியிட்டு “அவர் பாதையில்” என்ற கேப்ஷன் ஒன்றையும் சேர்த்திருந்தார்கள்.

இந்த முதல் பார்வை போஸ்டருக்கு எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகம் வந்துள்ளது. மிக மிக சிம்பிளான ஒரு போஸ்டரையா வெளியிடுவது என அஜித் ரசிகர்களே வருத்தப்பட்டுள்ளார்கள்.

அதைவிடவும் நிறைய மீம்ஸ்கள் இந்த போஸ்டரை வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. 'பாரதி கண்ணம்மா' என்ற டிவி சீரியலில் அதன் கதாநாயகி ரோஷினி ஹரிப்ரியன் இப்படி கையில் ஒரு பேக்கை எடுத்துக் கொண்டு போகும் புகைப்படம் சில வருடங்களுக்கு முன்பு மிகவும் வைரல் ஆனது. அதனுடன் ஒப்பிட்டு அஜித் கையில் பேக் உடன் இருக்கும் அவரது புகைப்படத்தை மட்டும் தனியாக 'கட்' செய்து அதை வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி உள்ளார்கள்.

இந்த நெகட்டிவ் விமர்சனங்களைத் தவிர்க்க உடனடியாக இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட வேண்டும் என அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !