உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிலீஸிற்கு முன்பே விருதுகளைக் குவிக்கும் ‛கொட்டுக்காளி' திரைப்படம்

ரிலீஸிற்கு முன்பே விருதுகளைக் குவிக்கும் ‛கொட்டுக்காளி' திரைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'கொட்டுக்காளி'. இதனை 'கூழாங்கல்' பட இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இதில் சூரி, அன்னா பென் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்களைக் கடந்தது. சில மாதங்களாக இந்த படத்தை திரைப்பட விழாக்களில் திரையிட அனுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே 74வது பெர்லின் திரைப்பட விழாவில் கொட்டுக்காளி படத்தை திரையிட்டனர். இது அல்லாமல் 2024ம் வருடத்திற்காக டிரன்சில்வேனியா திரைப்பட விழாவில் கலந்து கொண்டு நடுவர்கள் சிறந்த படத்திற்கான விருதை கொட்டுக்காளி படத்திற்கு தந்தனர்.

இந்த நிலையில், போர்ச்சுக்கலில் நடைபெற்ற புதிய படங்கள், இயக்குநர்களுக்கான 20வது திரைப்பட விழாவில் கோல்டன் லினக்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த திரைப்படம் பிக்ஷன் எனும் விருதை வென்றதாக படக்குழு அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !