உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இனி இதை செய்தால் தான் டிக்கெட் கட்டண உயர்வு : கட்டுப்பாடு விதித்த தெலங்கானா முதல்வர்

இனி இதை செய்தால் தான் டிக்கெட் கட்டண உயர்வு : கட்டுப்பாடு விதித்த தெலங்கானா முதல்வர்

தெலுங்குத் திரையுலகத்தில் பெரிய நடிகர்களின் புதிய படங்கள் வெளிவரும் போது டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள தெலங்கானா, ஆந்திர அரசுகள் அனுமதி அளிக்கும்.

கடந்த வாரம் வெளியான 'கல்கி 2898 ஏடி' படத்திற்குக் கூட இரண்டு அரசுகளும் இப்படி அனுமதி அளித்தன. இந்நிலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் இப்படியான டிக்கெட் கட்டண உயர்வுக்கு புதிதாக இரண்டு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

டிக்கெட் கட்டண உயர்வு கேட்கும் படங்களின் ஹீரோக்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இரண்டு வீடியோக்களில் நடித்துக் கொடுத்தால் மட்டுமே இனி கட்டண உயர்வு அனுமதிக்கப்படும் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

சைபர் கிரைம், போதைப் பொருளுக்கு எதிரான கருத்துக்களை அந்த வீடியோக்களில் சொல்ல வேண்டும். அவற்றை டிக்கெட் கட்டண உயர்வுக்கான விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். அது மட்டுமல்ல படங்களின் பிரிமீயர் காட்சிகளின் போது அந்த வீடியோக்களை தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !