உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராமாயணப் பின்னணியில் ராஜமவுலி, மகேஷ் பாபு படம்?

ராமாயணப் பின்னணியில் ராஜமவுலி, மகேஷ் பாபு படம்?

'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜமவுலி, மகேஷ்பாபு நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கான முன்கட்ட வேலைகள் கடந்த பல மாதங்களாகவே நடைபெற்று வருகின்றன. படம் எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

லேட்டஸ்ட்டாக இப்படத்தின் கதை பற்றிய ஒரு தகவல் கசிந்துள்ளது. ராமாயணக் கதையை பின்னணியாக வைத்து இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளதாம். 'சீதையைத் தேடி இலங்கை சென்ற அனுமான்' என்ற ஒரு வரிதான் இப்படத்தின் மையக் கரு என்கிறார்கள்.

அமெரிக்க காடுகளில் உருவாக உள்ள இப்படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் பிருத்விராஜிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 'சலார்' படத்தில் ஏற்கெனவே வில்லனாக நடித்திருந்தார் பிருத்வி. விரைவில் இப்படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் வெளியாகும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !