உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியன் 2 கதை இந்தக் காலத்திற்கும் பொருந்தும் - ஷங்கர்

இந்தியன் 2 கதை இந்தக் காலத்திற்கும் பொருந்தும் - ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' படத்தின் முதல் பாகம் 1996ம் ஆண்டு வெளிவந்தது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வாரம் வெளிவர உள்ளது. அப்போது இருந்த கதை மீண்டும் இரண்டாம் பாகத்தில் தொடரும் போது அது பொருத்தமாக இருக்குமா என்று சிலர் கேள்விகளை எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஷங்கர், “சேனாபதி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். சில விஷயங்களைப் பற்றி ஒவ்வொருவருக்கும் கோபம் இருக்கும், சில விஷயங்கள் மாற வேண்டும் என்றும் விருப்பம் இருக்கும். அதனால்தான் சேனாபதி கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டு வந்து 'இந்தியன் 2' கதையை எழுதினேன். இந்தியாவில் இன்றும் ஊழல் இருக்கிறது, அதைப் பற்றி தினமும் நாம் பத்திரிகைகளில் படிக்கிறோம். இந்த சோஷியல் மீடியா காலத்தில், அதற்குப் பொருத்தமாக இளைஞர்களுக்கு தொடர்பாகும் விதத்தில் கதை எழுத வேண்டிய தேவை இருந்தது. 'இந்தியன் 2' படத்தில் அது யதார்த்தமாக இருக்கும் அளவிற்கு எழுதியிருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 படத்தில் யு டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் கதையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதைச் சுற்றித்தான் கதையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !