மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
428 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
428 days ago
தமிழ் சினிமா உலகில் 100 கோடி வசூல் என்பதை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் 2007ம் ஆண்டில் வெளிவந்த 'சிவாஜி' படம்தான் தமிழில் முதலாவது 100 கோடி படம். அதற்கடுத்து 2008ல் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'தசாவதாரம்' படம் இரண்டாவது 100 கோடி படமாக அமைந்தது.
ரஜினி, கமலை அடுத்து விஜய் படம்தான் மூன்றாவதாக 100 கோடி வசூலை ஈட்டியிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால், விஜய்யோ, அஜித்தோ அந்த சாதனையைப் புரியவில்லை. அவர்களுக்கு முன்னதாக 2011ம் ஆண்டில் சூர்யா நடித்து வெளிவந்த 'ஏழாம் அறிவு' படம் 100 கோடி வசூல் சாதனையைப் புரிந்து தமிழின் மூன்றாவது 100 கோடி படம் என்ற பெருமையைப் பெற்றது.
2012ல் வெளிவந்த 'துப்பாக்கி' படம்தான் விஜய் நடிப்பில் வந்த படங்களில் முதலாவதாக 100 கோடி வசூலித்த படம். அஜித்துக்கு முதல் 100 கோடி படம் 2013ல்தான் கிடைத்தது. அந்தப் படம் 'ஆரம்பம்'.
தமிழில் இதுவரையில் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. இன்றைய முன்னணி நடிகர்களில் ஜுனியர் நடிகரான சிவகார்த்திகேயன் கூட 'டாக்டர், டான்' என இரண்டு 100 கோடி படங்களைக் கொடுத்துவிட்டார். ஆனால், விஜய் சேதுபதிக்கு அவரது 50வது படம்தான் அந்தப் பெருமையைப் பெற்றுத் தந்துள்ளது. அவர் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த 'மகாராஜா' படம் 100 கோடி வசூலித்து விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விஜய், அஜித், விக்ரம், ராகவா லாரன்ஸ், கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ், விஷால் ஆகியோர் 100 கோடி கிளப்பில் உள்ள ரசிகர்கள். அந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக விஜய் சேதுபதியும் சேர்ந்துள்ளார்.
428 days ago
428 days ago