டாக்டர் காதலியுடன் ஆஷிஷ் சக்கரவர்த்தி : விரைவில் திருமணமாம்
ADDED : 476 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார் ஆஷிஷ் சக்கரவர்த்தி. ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள ஆஷித் தனது நிஜ காதலியை இன்ஸ்டாகிராமின் வழியே ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மருத்துவரான காயத்ரி என்பவரை ஆஷிஷ் காதலித்து வருகிறார். அண்மையில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், ரீல்ஸ்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட அதை பார்த்த ரசிகர் ஒருவர் இவர் உங்கள் காதலியா? என்று கேட்டிருந்தார். அதற்கு ஆமாம் என்று பதிலளித்துள்ள ஆஷிஷ் விரைவில் காயத்ரியை திருமணம் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் சக நடிகர்கள் என பலரும் ஆஷிஷ் - காயத்ரி ஜோடிக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.