உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேபி ஜான் படத்தில் சல்மான்கான் - அட்லி

பேபி ஜான் படத்தில் சல்மான்கான் - அட்லி

தமிழில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய படம் தெறி. இந்த படம் தற்போது ஹிந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இயக்குனர் அட்லியே தயாரிக்கும் இந்த படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்கள். வருகிற டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பேபி ஜான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் மற்றும் இயக்குனர் அட்லி ஆகிய இருவரும் நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அட்லி இயக்கும் அடுத்த படத்தில் சல்மான்கான் நடிக்க இருப்பதால் நட்பு அடிப்படையில் இந்த பேபி ஜான் படத்தில் அவர் நடித்துக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !