அடுத்தவர்களின் கருத்துக்களை தூக்கி சுமக்காதீர்கள் : விமர்சனங்களுக்கு த்ரிஷா பதிலடி
ADDED : 470 days ago
கடந்த 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. இவரது சினிமா கேரியரில் சாமி, கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பொன்னியின் செல்வன் போன்ற பல படங்கள் முக்கிய படங்களாக அமைந்தன. தற்போது கமலுடன் தக்லைப், அஜித்துடன் விடாமுயற்சி போன்ற படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.
சமீபத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இவர் வெளியிட்ட போட்டோ சோசியல் மீடியாவில் பலதரப்பட்ட வதந்திகளுக்கு வழி வகுத்தது. குறிப்பாக பாடகி சுசித்ரா இவர்களை குறிப்பிட்டு பேசிய வீடியோ சர்ச்சையை மேலும் அதிகமாக்கியது. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் மறைமுகமாக இதற்கு பதில் தரும் விதமாக, ‛‛அடுத்தவர்களின் கருத்துக்களை தூக்கி சுமக்காதீர்கள்'' என்று ஒரு பதிவு போட்டு வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் த்ரிஷா.