உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நாக் அஸ்வின்

பிரபாஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நாக் அஸ்வின்


பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் 700 கோடியைத் தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.

படத்தில் பிரபாஸுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்ற சர்ச்சை எழுந்தது. பிரபாஸ் ரசிகர்கள் பலரும் வருத்தப்பட்டனர். அமிதாப்புக்குத்தான் காட்சிகள் அதிகம் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் படத்தின் இயக்குனர், “இரண்டாம் பாகத்தில் பிரபாஸுக்கான காட்சிகள் அதிகம் இருக்கும். முதல் பாகத்தில் கதையையும், கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தவே சரியாக இருந்தது. இரண்டாம் பாகத்தில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. முதல் பாகத்தில் 40 சதவீதக் கதை இடம் பெற்றுவிட்டது. மீதமுள்ள 60 சதவீதக் கதை இரண்டாம் பாகத்தில் வரும்.

இப்படத்தை எடுக்க 'மாயாபஜார்' படம்தான் இன்ஸ்பிரேஷனாக அமைந்தது. அந்தப் படம் மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து, கற்பனைக் காட்சிகளுடன் எடுக்கப்பட்ட ஒரு படம்.

இரண்டாம் பாகத்தில் யார் யார் கேமியோ கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள் என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை.

முதல் பாகம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்ததாகச் சொன்னார்கள். படத்திற்கான அறிமுகத்தை ஏற்படுத்தியதால் அப்படி நடந்தது. அந்த புகாரை புரிந்து கொண்டுள்ளேன்,” என்றும் கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !