உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினிகாந்த்துடன் 'கூலி' படத்தில் நடிக்கும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன்

ரஜினிகாந்த்துடன் 'கூலி' படத்தில் நடிக்கும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் ஆரம்பமானது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

ஆரம்ப கால கட்டங்களில் ரஜினி, கமல் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்தனர். அதன்பின் கமல் ஆலோசனைப்படி இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவை எடுத்து தனித்தனி கதாநாயகர்களாக நடிக்க ஆரம்பித்து நாற்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக முன்னணி நடிகர்களாகவே இருக்கிறார்கள்.

இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க மாட்டார்களா என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 'கூலி' படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன் இணைந்து நடிப்பது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. நேற்றைய படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.

'விக்ரம்' படத்திற்குப் பிறகு கமல்ஹாசனின் அன்புக்குரிய இயக்குனராக மாறிவிட்டார் லோகேஷ். ஸ்ருதியும், லோகேஷும் இணைந்து ஒரு ஆல்பத்தில் கூட நடித்தனர். இப்போது தன் படத்திலேயே ஸ்ருதியை நடிக்க வைக்கிறார் லோகேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !