ஐமேக்ஸில் வெளியாகும் இந்தியன் 2!
ADDED : 465 days ago
கடந்த 1996ம் ஆண்டில் வெளிவந்த 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ளது. காஜல் அகர்வால், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, விவேக், பாபி சிம்ஹா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜூலை 12ம் தேதி திரைக்கு வருகின்ற இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் இந்தியன்-2 திரைப்படம் உலகளவில் உள்ள ஐமேக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட திரையரங்குகளில் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே தமிழில் பொன்னியின் செல்வன், லியோ, கேப்டன் மில்லர் உட்பட சில படங்கள் மட்டும் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.