என் மகளுக்கு ஒரு பிரச்னையும் இல்லை: வதந்திகளுக்கு அமீத் பார்கவ் முற்றுப்புள்ளி
ADDED : 475 days ago
சின்னத்திரை பிரபலங்களான அமீத் பார்கவும், ஸ்ரீரஞ்சனியும் சிறந்த தம்பதிகளாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு வேதா ஸ்ரீ என்கிற அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சில ஊடகங்களில் அமீத் பார்கவின் மகளுக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதாக செய்திகள் வெளியானது. அதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள அமீத் பார்கவ், 'என் மகளுக்கு ஆட்டிசம், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற எந்த பிரச்னையும் இல்லை. மருத்துவமனையில் பரிசோதித்துவிட்டோம். அவளுக்கு இருப்பது எக்கோலாலியா. நாம் சொல்கிற சில விஷயங்களை சீக்கிரமாக புரிந்து கொள்ள முடியாது அவ்வளவு தான். மற்றபடி என் மகள் நன்றாக இருக்கிறாள்' என்று கூறியுள்ளார். இதனையடுத்து வேதா ஸ்ரீக்கு சீக்கிரம் குணமாகிவிடும் என ரசிகர்கள் கமெண்டுகளில் தங்கள் ஆதரவை அமீத் பார்கவ் - ஸ்ரீரஞ்சனிக்கு கூறி வருகின்றனர்.