அதிதி ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்ட பட நிறுவனம்!
ADDED : 456 days ago
இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் விருமன், மாவீரன் போன்ற படங்களில் நடித்தவர், தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிக்கும் ‛நேசிப்பாயா' என்ற படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து அதர்வாவுக்கு ஜோடியாக ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் தற்போது இணைந்திருக்கிறார் அதிதி ஷங்கர். இந்த நிலையில் நேற்று அதிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ வாரி பிலிம் நிறுவனம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளது.