ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார்!
ADDED : 456 days ago
ஜோக்கர், குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கியவர் ராஜூமுருகன். கார்த்தி நடிப்பில் அவர் இயக்கிய ஜப்பான் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் தோல்வி அடைந்து விட்டது. இந்த நிலையில், அடுத்தபடியாக சசிகுமாரை நாயகனாக வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார் ராஜூ முருகன். இப்படத்தில் கன்னட நடிகை சைத்ரா அச்சார் என்பவர் நாயகியாக நடிக்கிறார். சீன் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை தற்போது தொடங்கியுள்ள ராஜூமுருகன், விரைவில் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.