உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் படத்தை வாங்கிய அஜித் படத் தயாரிப்பு நிறுவனம்

விஜய் படத்தை வாங்கிய அஜித் படத் தயாரிப்பு நிறுவனம்


தமிழ் சினிமாவில் தற்போது போட்டி நடிகர்களில் ரஜினி - கமல் ஆகியோருக்குப் பிறகு விஜய் - அஜித் என்றுதான் கடும் போட்டி இருக்கிறது. சமூக வலைதளங்களில் இருவரது ரசிகர்களின் போட்டியும், ஆளுமையும் அதிகம்.

விஜய் நடித்த 'தி கோட்' படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு வினியோக உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. சுமார் 30 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல். விஜய் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'லியோ' படம் சுமார் 20 கோடிக்குதான் விற்பனையானதாம். அந்தப் படத்தை விட கூடுதலாக 10 கோடி அதிகமாக விற்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தைத் தயாரித்து வருகிறது. விஜய்யின் 'தி கோட்' படத்தை தெலுங்கில் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !