மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
421 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
421 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
421 days ago
இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல் கூட்டணியில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' படம் வரவேற்பை பெற்றது. தற்போது இவர்கள் மீண்டும் இணைந்து இதன் இரண்டாம் பாகத்தை தந்துள்ளனர். நாளை மறுநாள் (12ம் தேதி) இந்தியன் 2 படம் வெளியாகிறது. கமல் உடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.
இயக்குனர் ஷங்கர் அளித்த பேட்டி : இந்தியன் 2 ஆரம்பித்த பின் கொரோனா பிரச்னை வந்தது. படம் வருமா வராதா என்ற சூழ்நிலை இருந்தது. அந்த சமயத்தில் தான் கேம் சேஞ்சர் பட கதையை ரெடி பண்ணினேன். பெரும் சவால்களை கடந்து இந்தியன் 2 படத்தை எடுத்துள்ளேன். படப்பிடிப்புக்கு காலையில் முதல் ஆளாக கமல் வருவார். படப்பிடிப்பு முடிந்து கடைசியாக தான் அவர் செல்வார். எஸ்.ஜே.சூர்யா உடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். சில காட்சிகளில் நானும், அவரும் திருப்தி அடையவில்லை. மீண்டும் மீண்டும் சில காட்சிகளை எடுத்தோம்.
நான் பிரமாண்டமாக படம் எடுக்க நினைப்பதில்லை. மக்கள் திருப்திபடும் அளவுக்கு அந்த காட்சியை எடுக்க நினைப்பேன். அது பிரமாண்டமாக அமைந்து விடுகிறது. ரஜினி, கமல் இரண்டு பேருக்கும் கதை சொல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இரண்டு பேரும் கதைக்குள் வந்துவிட்டால் நம்மை அப்படியே நம்புவார்கள்.
என்னை பார்த்து பல இயக்குனர்கள் இப்போது சினிமாவுக்கு வருகிறார்கள் என்கிறார்கள். நான் கே பாலசந்தர், மகேந்திரன் ஆகியோரை பார்த்து சினிமாவிற்கு வந்தேன். குட் நைட், டாடா, கூழாங்கல் போன்ற பல படங்களை பார்த்தேன், நன்றாக இருந்தது. லோகேஷ் கனகராஜ் , வினோத், போன்ற பலர் நல்ல படங்கள் கொடுக்குறாங்க. என் மகன் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விஷயம் செய்வார். ஷார்ட் பிலிம் பண்ணுவார், போட்டு காட்டுவார். இதுவரை என்னிடம் நடிக்க வாய்ப்பு கேட்டது இல்லை. ஏதாச்சும் பண்ணட்டும் என்று நானும் விட்டுவிட்டேன்.
இவ்வாறு தெரிவித்தார்.
421 days ago
421 days ago
421 days ago