உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛தி கோட்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் 4 பிரபலங்கள்

‛தி கோட்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் 4 பிரபலங்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‛தி கோட்'. செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏஐ தொழில் நுட்பத்தில் நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார். அவர் இடம்பெறும் காட்சிகள் ஒரு நிமிடம் வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் இப்படத்தில் திரிஷா, வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, மட்டுமின்றி சிவகார்த்திகேயனும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் திரிஷா, விஜய்யுடன் ஒரு பாடல் காட்சி மட்டுமின்றி சில காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !