உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் கவுதம் மேனன் படத்திற்கு இசையமைக்கும் தர்புகா சிவா

மீண்டும் கவுதம் மேனன் படத்திற்கு இசையமைக்கும் தர்புகா சிவா

சசிகுமார் நடித்த கிடாரி படத்திற்கு இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தர்புகா சிவா. அந்தப்படத்தில் இடம்பெற்ற வண்டியில நெல்லு வரும் பாடல் ஹிட்டானதை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திலும் பாடல்கள் ஹிட்டானதை தொடர்ந்து சில படங்களில் இசையமைத்த தர்புகா சிவா அதன்பிறகு சில படங்களில் நடிகராகவும் நடித்தார். பின்னர் குயீன், மத்தகம் போன்ற வெப் சீரிஸ்களுக்கும் இசையமைத்தார்.

இந்த நிலையில் ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் கவுதம் மேனன் இயக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் தர்புகா சிவா. மலையாளத்தில் முதன்முறையாக அடியெடுத்து வைத்துள்ள கவுதம் மேனன், மம்முட்டியை வைத்து இயக்கும் புதிய படத்திற்கு தான் இவர் இசையமைக்கிறார். மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் நடிகர் சுரேஷ் கோபியின் மகனான கோகுல் சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !