தனுஷிற்கு ஜோடியாகும் அனிமல் பட நடிகை
ADDED : 454 days ago
ராஞ்சனா, அட்ரங்கி ரே படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் ' தெரே இஸ்க் மெயின்' என்கிற ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார் என கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதன் பின்னர் இப்படம் குறித்து எந்த வித புதிய அறிவிப்புகளும் வெளியாகவில்லை. அதேசமயம் தனுஷ் தனது கைவசம் உள்ள ராயன், குபேரா போன்ற படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் வாரணாசி மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சமீபத்தில் அனிமல் படத்தில் நடித்து பிரபலமான திரிப்டி திம்ரி எனும் நடிகை நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.