உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இவன் தந்திரன்' இரண்டாம் பாகம் தயாராகிறது

'இவன் தந்திரன்' இரண்டாம் பாகம் தயாராகிறது

2017ம் ஆண்டு வெளிவந்த படம் 'இவன் தந்திரன்'. இயக்குனர் ஆர்.கண்ணன் தயாரித்து, இயக்கி இருந்தார். கவுதம் கார்த்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்ஜே.பாலாஜி, சூப்பர் சுப்பராயன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இமான் இசை அமைத்திருந்தார். சென்னை ரிச்சி தெருவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் வெளிவந்தது.

தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதையும் ஆர்.கண்ணன் தயாரித்து, இயக்குகிறார். வட சென்னை, கேஜிஎப் 2, சகா உள்ளிட்ட படங்களில் நடித்த சரண் சக்தி இதில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி யார் என்று இன்னும் முடிவாகவில்லை. சமுத்திரகனி, தம்பி ராமய்யா, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், கலைராணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார், பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !