அர்ஜூன் தாஸ் ஜோடியான அதிதி ஷங்கர்
ADDED : 455 days ago
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் 'விருமன்' படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அடுத்து அவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மாவீரன்' படத்தில் நடித்தார். தற்போது ஆகாஷ் முரளி ஜோடியா 'நேசிப்பாயா' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் அர்ஜூன் தாஸ் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதனை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்குகிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். ரொமான்டிக் த்ரில்லர் ஜார்னரில் படம் தயாராகிறது. மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.