ரஜினி - அஜித்துக்கு கதை ரெடி பண்ணிய அல்போன்ஸ் புத்திரன்
ADDED : 462 days ago
மலையாளத்தில் வெளியான ‛நேரம், பிரேமம்' போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதையடுத்து அவியல், கோல்ட் போன்ற படங்களை இயக்கியவர் தற்போது சாண்டி மாஸ்டரை வைத்து கிபிட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது அல்போன்ஸ் புத்திரன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரஜினி, அஜித் ஆகிய இருவரையும் இணைத்து இயக்குவதற்கு ஒரு கதை தயார் செய்து வைத்திருக்கிறேன். ஒருவேளை அவர்கள் அந்த கதையில் நடிக்க மறுத்தால் கமல், சிம்பு ஆகிய இருவரையும் வைத்து அந்த படத்தை இயக்குவதற்கு முயற்சி செய்வேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.