இந்தியன் படத்தையே ரீ-ரிலீஸ் செய்திருக்கலாம் : ரச்சிதா மகாலட்சுமி விமர்சனம்
ADDED : 457 days ago
ஷங்கர் இயக்கத்தில் கமல் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் இந்தியன் 2. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவதால் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை படக்குழு பூர்த்தி செய்ய தவறிவிட்டது. நீளமான காட்சிகள், திரைக்கதை சரியின்மை என பலரும் இந்த படத்தை பற்றி விமர்சித்து வருகின்றனர்.
இந்தப் படத்தைப் பார்த்து விட்டு விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அதில், இதுக்கு பேசாமல் இந்தியன் படத்தையே ரீ ரிலீஸ் செய்திருக்கலாம். அதிகம் ஏமாற்றம் அடைந்தேன் என பதிவிட்டுள்ளார்.