விமான நிலையத்தில் ரசிகர்களால் ராஷ்மிகா அசவுகரியம்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பரவலாக நடித்து வருகிறார் ரஷ்மிகா மந்தனா. தெலுங்கில் நடித்த புஷ்பா, ஹிந்தியில் நடித்த அனிமல் போன்ற பல படங்கள் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தன. இதன் காரணமாக, பாலிவுட்டிலும் தற்போது ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் அதிகரித்து விட்டார்கள். இந்த நிலையில் நேற்று மும்பைக்கு சென்ற ராஷ்மிகாவை அங்குள்ள விமான நிலையத்தில் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். இதனால் தனது முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்கை நீக்கிவிட்டு அவர்கள் செல்பி எடுக்க போஸ் கொடுத்தார் ராஷ்மிகா. சிலர் அவரை தொட்டு செல்பி எடுக்க முயன்றனர். அதை அசவுகரியமாக அவர் உணர்ந்தார். ஆனபோதும் கோபத்தை தனது முகத்தில் வெளிப்படுத்தாமல் கடைசிவரை ரசிகர்களுக்கு போஸ் கொடுத்தவர், பிளையிங் கிஸ் கொடுத்தபடி தனது காரில் ஏறி பறந்துள்ளார் . அது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது.