லாஸ்லியா நாயகியாக நடிக்கும் ‛மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்'
ADDED : 532 days ago
பிரண்ட்ஸ், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் பிக்பாஸ் லாஸ்லியா. அந்த படங்களுக்கு பிறகு தனது உடல் எடையை குறைத்திருப்பவர், அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி தனது புகைப்படங்களையும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் என்ற படத்தில் புதுமுகம் ஹரி பாஸ்கர் என்பவருக்கு ஜோடியாக நடிக்கிறார் லாஸ்லியா . அருண் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கும் இந்த படத்தை மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதை இயக்குனர் அட்லி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.