குட் பேட் அக்லி படத்தில் அஜித் பற்றி தேவி ஸ்ரீ பிரசாத் கொடுத்த அப்டேட்
ADDED : 461 days ago
விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம் குட் பேட் அக்லி. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற போது, ஒரு பாடல் மற்றும் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், ஒரு விழாவில் குட் பேட் அக்லி படம் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், இந்த படத்தில் அஜித்துக்கு ஒரு அதிரடியான ஓப்பனிங் பாடல் கம்போஸ் செய்துள்ளேன். அந்த பாடல் சமீபத்தில் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டபோது மாஸாக நடனமாடினார் அஜித். இந்த பாடல் அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆகவும் மிகப்பெரிய விருந்தாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார் .