நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ்!
ADDED : 490 days ago
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன்-2 படம் கடந்த 12ம் தேதி திரைக்கு வந்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமையான நாளை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக ஒரு பதிவு போட்டு உள்ளார்கள்.
தற்போது தக்லைப் படத்தை மணிரத்னத்துடன் இணைந்து தயாரித்து வரும் கமல்ஹாசன், அந்த படம் குறித்த அறிவிப்பை நாளை வெளியிடப் போகிறாரா? அல்லது சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாரித்துள்ள அமரன் படம் அல்லது சிம்புவின் 48வது படம் குறித்த அறிவிப்பை வெளியிடப் போகிறாரா? என்பது தெரியவில்லை. என்றாலும் இதில் ஏதாவது ஒரு அறிவிப்புதான் நாளை வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவிக் கொண்டிருக்கிறது.