உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானிக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்

நானிக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் தம்பதியினரின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். ஹிந்தியில் தொடர்ந்து கதாநாயகியாக படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் உடன் தேவாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ராம் சரணுக்கு ஜோடியாக அடுத்த படத்தில் நடிப்பதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் தெலுங்கில் தசரா பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் மீண்டும் நானி ஒரு படத்தில் நடிக்கிறார். இது நானியின் 33வது படமாக உருவாகிறது. இதனை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர். இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஜான்வியின் மூன்றாவது தெலுங்கு படம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !