சாந்தகுமார் இயக்கத்தில் விக்ரம்?
ADDED : 539 days ago
மௌனகுரு, மகாமுனி போன்ற வித்தியாசமான திரைக்கதைகளைக் கொண்ட படங்களை இயக்கியவர் சாந்தகுமார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த 'ரசாவதி' படம் சற்று கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது சாந்தகுமார் நடிகர் விக்ரமை சந்தித்து கதை ஒன்றைக் கூறி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே விக்ரம் நடித்த தில், தூள் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.