உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான்காவது முறையாக படத்தை இயக்கும் தனுஷ்!

நான்காவது முறையாக படத்தை இயக்கும் தனுஷ்!


நடிகர் தனுஷ் முன்னனி நடிகராக வலம் வந்தாலும் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என தனது பன்முக திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

இயக்குனராக ப.பாண்டி எனும் படத்தை இயக்கினார். தற்போது ‛ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' ஆகிய படங்களை இயக்கி உள்ளார். விரைவில் இப்படங்கள் வெளியாக உள்ளது.

இதைத்தொடர்ந்து தனுஷ் நான்காவது முறையாக படம் ஒன்றை இயக்கி அவரே நடிக்கவுள்ளார் என சமீபத்தில் எஸ்.ஜே. சூர்யா அளித்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இது குறித்து விசாரித்தபோது இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !