வீர தீர சூரன் படத்திலிருந்து சூர்யா பர்ஸ்ட் லுக் வெளியானது!
ADDED : 457 days ago
இயக்குனர் மற்றும் நடிகர் எஸ். ஜே. சூர்யா சமீபகாலமாக படங்களை இயங்குவதை விட நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் கைவசமாக ராயன், வீர தீர சூரன், சூர்யாவின் சனிக்கிழமை, கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் உள்ளது.
சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62வது படமாக 'வீர தீர சூரன்' 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா,சுராஜ் வென்ஜாரா, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .சிபு தமின்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கின்றார்.
இன்று எஸ்.ஜே. சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில் எஸ். ஜே. சூர்யா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தின் பெயர் காளி என பெயரிட்டுள்ளனர்.