உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ஒரு வெப்சீரிஸ் : ஆதித்ய ராய் கபூருக்கு ஜோடியாகும் சமந்தா

மீண்டும் ஒரு வெப்சீரிஸ் : ஆதித்ய ராய் கபூருக்கு ஜோடியாகும் சமந்தா

தி பேமிலி மேன் தொடர் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார் சமந்தா. அந்த தொடர் அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அதையடுத்து தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். விரைவில் இந்த தொடர் வெளியாக உள்ளது. இதையடுத்து தி பேமிலி மேன் வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே தயாரிக்கும் இன்னொரு புதிய வெப் தொடரிலும் நடிக்க போகிறார் சமந்தா. இந்தத் தொடரில் பாலிவுட் நடிகர் ஆதித்ய ராய் கபூருக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். இதில் இன்னொரு நாயகியாக வாமிகா கபியும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த தொடரை ரகி அனில் பார்வே என்பவர் இயக்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !