உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லென்ஸால் வந்த பிரச்னை : சிம்பு பட நடிகை ஜாஸ்மினுக்கு கருவிழி பாதிப்பு

லென்ஸால் வந்த பிரச்னை : சிம்பு பட நடிகை ஜாஸ்மினுக்கு கருவிழி பாதிப்பு

தமிழில் சிம்பு நடித்த ‛வானம்', சித்தார்த் நடித்த ‛ஜில் ஜங் ஜக்' ஆகிய படங்களில் நடித்தவர் ஜாஸ்மின். கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிகளிலும் சில நடித்தவர் தற்போது ஹிந்தி சீரியல்களில் நடிக்கிறார். இவருக்கு கருவிழி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றுக்காக டில்லி சென்றிருந்தேன். இதற்காக கண்களில் லென்ஸ் அணிந்திருந்தேன். அதில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. திடீரென கண்கள் வலிக்க தொடங்கின. நிகழ்ச்சிக்காக கண்ணாடி மாட்டிக் கொண்டு வேதனையுடன் சமாளித்தேன். பின்னர் கண் மருத்துவரிடம் சென்று காண்பித்தபோது கருவிழி பாதிக்கப்பட்டதாக கூறினார். வலிமாக அதிகமாக உள்ளது, தூங்க கூட முடியவில்லை. சிகிச்சை எடுத்து வருகிறேன். இன்னும் நாட்களில் சரியாகும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !