தனுஷ் இயக்கத்தில் நித்யா மேனன், பிரகாஷ்ராஜ்
ADDED : 438 days ago
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள அவரது 50வது படமான 'ராயன்' வருகின்ற ஜூலை 26ந் தேதி திரைக்கு வருகிறது. அவருடன் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி தீவிரமாய் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும் போது, தனுஷ் புதிதாக என்னிடம் ஒரு கதையை கூறினார் அந்த கதையை தனுஷ் இயக்கவுள்ளார் அதில் முதன்மைத் கதாபாத்திரத்தில் என்னுடன் இணைந்து நித்யா மேனன் நடிக்கவுள்ளார் என பகிர்ந்துள்ளார் .
இப்போது சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாகி வருகிறது.