மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
408 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
408 days ago
ஒரு திரைப்படத்தை அதில் உள்ள கதை, கதாபாத்திரங்கள், பாடல்கள், நடிப்பு ஆகியவற்றை விடவும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி அதனால் கிடைக்கும் இலவச விளம்பரம் மூலம் ஓட வைக்கலாம் என்று தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் சிலர் ஆலோசனை சொல்கிறார்களாம். அதன் காரணமாகத்தான் சமீபகாலப் படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது, பெண்கள் மீதான வன்மம் உள்ளிட்டவற்றை வேண்டுமென்றே வைக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
யு-டியுப் தளங்களில் அப்படியான காட்சிகளுக்கு சென்சார் கிடையாது. படத்திற்கு சென்சார் வாங்கும் போது அப்படிப்பட்ட காட்சிகளை நீக்கவும், வெட்டவும் படக்குழுவினர் சம்மதித்துவிடுவார்களாம். அதுவரையில் சர்ச்சை மூலம் பரபரப்பு ஏற்பட்டு அதனால், படத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவு போட வைக்கிறார்களாம். இதற்கென்றே சிறப்பு குழுக்கள் வேலை செய்கிறதாம்.
விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தில் அப்படியான சர்ச்சை அதிகம் ஏற்பட்டது. டிரைலரில் கெட்ட வார்த்தை ஒன்றையும் பயன்படுத்தி பரபரப்பு ஏற்படுத்தினார்கள். தனுஷின் சில படங்களின் முதல் பார்வை போஸ்டர்களிலும் புகை பிடிக்கும்படி இருந்து பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது சூர்யாவின் 44வது படத்திற்காக நேற்று வெளியான வீடியோ ஒன்றிலும் அவர் புகைபிடித்த காட்சி இடம் பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது 'மது விலக்கு கொள்கை' பற்றி குறிப்பிட்டு நீண்ட அறிக்கை ஒன்றை விட்டு தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவித்து 'இனி ஒரு விதி செய்வோம், அதை எந்நாளும் காப்போம்' என்று முடித்திருந்தார் சூர்யா.
இப்போது தனது பிறந்தநாள் என்றாலும் பரவாயில்லை புகை பிடிக்கும் வீடியோவை வெளியிட்டு அவர் சொன்னதை அவரே காப்பாற்றத் தவறி விட்டாரே என்று கிண்டலடிக்கிறார்கள்.
408 days ago
408 days ago