மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
408 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
408 days ago
தமிழ் சினிமாவில் இன்றைய சூழலில் இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். அவருடைய அதிரடி இசையில் சில முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட்டானவை. யு டியூப் தளத்தில் அதிக 100 மில்லியன் பாடல்களைக் கொடுத்தவர் அனிருத் என்ற பெருமை உண்டு.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் ஆகியோருடன் அனிருத் 'இந்தியன் 2' படத்தில் இணைந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி. ஆனால், படத்தில் இடம் பெற்ற ஓரிரு பாடல்களும் ஹிட்டாகாமல் ஏமாற்றத்தைத் தந்தது. அனிருத் ரசிகர்களுக்கு அது அதிர்ச்சிதான்.
இருந்தாலும் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படம் பற்றிய ஒரு இசை அப்டேட்டைக் கொடுத்துள்ளார் தமன். அதில் 'கேம் சேஞ்சர்' படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் உள்ளதாம். ஆகஸ்ட் மாதக் கடைசியில் இருந்து அப்டேட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் என்று தமன் தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இப்படம் வெளியாகப் போகிறது.
ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் ஒரு கதாநாயகனாக நடித்த தமன், தற்போது தன்னை நடிகராக அறிமுகப்படுத்திய குருநாதரின் பிரம்மாண்ட படத்துக்கு இசையமைப்பது அவருக்கு பெருமைதான்.
ஷங்கர் - அனிருத் கூட்டணி ஏமாற்றத்தை, ஷங்கர் - தமன் கூட்டணி சரி செய்துவிடும் என இருவரது ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
408 days ago
408 days ago