பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹனிமூன் கொண்டாடிய சோனாக்ஷி சின்ஹா
ADDED : 452 days ago
2014ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார். இவர் கடந்த மாதம் ஜாகிர் இக்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதை அடுத்து கணவருடன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளார் சோனாக்ஷி சின்ஹா. அங்குள்ள ஒரு நீச்சல் குளத்தில் தாங்கள் நீராடும்போது எடுத்துக் கொண்டது உள்ளிட்ட பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா. அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து லைக்ஸ் குவிந்து வருகிறது. திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார் சோனாக்ஷி சின்ஹா.