அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்
ADDED : 498 days ago
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கினார். அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதுதவிர ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை அடுத்து குட் பேட் அக்லி படத்தில் நடித்து வரும் அஜித்தை அடுத்தபடியாக பிரசாந்த் நீல் இயக்குவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அப்படி அஜித்தை வைத்து அவரது 64வது மற்றும் 65வது படங்களை பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாகவும், அந்த இரண்டு படங்களையும் கேஜிஎப் தயாரிப்பான ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் அடுத்தாண்டு 2025ல் அஜித் நடிக்கும் படத்தை பிரசாந்த் நீல் இயக்குவார் என்று கூறப்படுகிறது.