உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ்

அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ்

இந்தவாரம் நேற்று வெள்ளிக்கிழமை தனுஷின் 50வது படமான 'ராயன்' வெளியானாது. அடுத்த வாரம் வெள்ளிகிழமை (ஆக. 2) 7 படங்கள் வெளியாகின்றன. அனைத்துமே மீடியம் பட்ஜெட் படங்கள்.

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கி உள்ள 'மழை பிடிக்காத மனிதன்' வெளியாகிறது. இது ஆக்ஷன் திரைப்படம். புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள 'நண்பன் ஒருவன் வந்த பிறகு படம்' வெளியாகிறது. இதனை வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க சிம்பு தேவன் இயக்கி உள்ள 'போட்' படம் வெளியாகிறது. இது முழுக்க முழுக்க கடலில் எடுக்கப்பட்டுள்ள படம்.

நகுல் நடித்து நீண்ட நாள் வெளியாகமல் இருந்த 'வாஸ்கோடகாமா' படம் வெளிவருகிறது. பால சரவணன் கதையின் நாயகான நடித்துள்ள 'பேச்சி' என்கிற ஹாரர் படமும், தெருக்கூத்து கலையை மையமாக கொண்ட 'ஜமா' என்ற படமும், மன்சூரலிகான் இயக்கி, தயாரிக்க அவரது மகன் நாயகனாக நடித்துள்ள 'கடம்பான்பாறை' படமும் வெளிவருகிறது. இதில் எல்லா படமும் ஏதோ ஒரு வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !