உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம்

இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம்

'ஜோ' படத்தில் இணைந்த நடித்த ரியோ - மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிக்கிறது. கலையரசன் தங்கவேல் இயக்குகிறார். ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், பாண்டியன், ஜென்சன் திவாகர், ஆகியோர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார், சிந்து குமார் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி 2 மாதத்தில் முடிவடைந்துள்ளது.

இயக்குனர் கலையரசன் கூறும்போது, “திருமணமான ஆண்களின் பிரச்னைகளை பெண்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக சொல்லும், ரொமான்ஸ் காமெடி ஜானரில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக தொடங்கிய படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்துள்ளோம். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை துவக்கி உள்ளோம். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாக இருக்கிறது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !