மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
431 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
431 days ago
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ஹிந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். 'மிஸ்டர் அண்ட் மிசஸ் மஹி' படத்திற்குப் பிறகு ஜான்வி கபூர் நடித்து ஆகஸ்ட் 2ல் ஹிந்தியில் வெளியாக உள்ள படம் 'உலாஜ்'. சுதன்ஷூ சரியா இயக்கியுள்ள இப்படத்தில் ரோஷன் மாத்யு, குல்ஷன் தேவையா, அடில் ஹூசைன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கான புரமோஷன் பேட்டி ஒன்றில் ஜான்வி கலந்து கொண்ட போது அவரிடம் 'மிஸ்டர் இந்தியா' படத்தை பற்றி ரீமேக் செய்வது பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜான்வி, “சில கிளாசிக் படங்களை கண்டிப்பாக ரீமேக் செய்யக் கூடாது. அவற்றை நாம் தொடவும் கூடாது,” என்றார்.
'மிஸ்டர் இந்தியா' படத்தினை ஜான்வியின் அப்பா போனி கபூர் தயாரிக்க, சித்தப்பா அனில் கபூர், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்திருந்தார். 1987ல் வெளிவந்த அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. லட்சுமிகாந்த் பியாரேலால் இசையில் படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டானவை.
431 days ago
431 days ago