மது அருந்தியபடியே ‛குடிப்பழக்கம் தீங்கானது' என அட்வைஸ் செய்த ஓவியா
ADDED : 542 days ago
‛களவாணி' படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா, மெரினா, கலகலப்பு, மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா பங்கேற்றார். சினிமாவை விட இந்நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார். ஆனால் அது சினிமா வாய்ப்பாக மாறவில்லை. சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் மது அருந்தும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.