நடிகரை கண்டதும் பதற்றமடையும் நடிகை
ADDED : 485 days ago
வம்பு நடிகர், நடன சூறாவளி என,
இரண்டு பேரையும் காதலித்து, அதையடுத்து, சிவமான அந்த இயக்குனரை கை
பிடித்திருக்கிறார், தாரா நடிகை. இந்த நேரத்தில், முன்னாள் காதலர்களை
முழுமையாக தவிர்த்து வரும் அம்மணி, சில சமயங்களில், சினிமா நிகழ்ச்சிகளில்
அவர்களுக்கு அருகில் உட்கார வேண்டிய சூழல் ஏற்பட்டால், ரொம்பவே பதற்றம்
அடைகிறார்.
சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியின் போது, வம்பு நடிகர், அவர்
அருகே வந்தமர்ந்ததும், கடும், 'அப்செட்' ஆகி தடுமாறியவர், சத்தம் இல்லாமல்
எழுந்து, அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறினார்.