ஸ்வீட் ஹார்ட்: ரியோ ராஜ் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு
ADDED : 404 days ago
ஜோ படத்திற்கு பிறகு ரியோ ராஜ் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் படத்தின் டைட்டில் 'ஸ்வீட்ஹார்ட்' என்று தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிவித்துள்ளார். படத்தை தயாரிப்பதுடன் அவரே இசை அமைக்கவும் செய்கிறார். இந்த படத்தில் கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாச்சலம், பௌஸி , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வினீத் இயக்குகிறார்.
படத்தின் டைட்டிலுக்கான காணொளி பிரத்யேகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த 27ம் தேதியன்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியின்போது, 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் டைட்டில் காணொளியை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார்.