நானி படத்தில் அதிதி பாலன்
ADDED : 472 days ago
'அண்டே சுந்தரனிகி' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் படம் 'சரிபோதா சனிவாரம்'. தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.
இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 29ந் தேதி அன்று திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து சில கிளிம்ஸ் வீடியோக்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் பத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிகை அதிதி பாலன் நடித்துள்ளதாக அறிமுக போஸ்டர் உடன் படக்குழு அறிவித்துள்ளனர். இவர் கேப்டன் மில்லர், அருவி, சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.