டிமான்டி காலனி 2 படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
கடந்த 2015ம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த 'டிமான்டி காலனி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'டிமான்டி காலனி 2ம் பாகத்தை' அஜய் ஞானமுத்து தயாரித்து, இயக்கியுள்ளார். இது முதல் பாகம் போன்று இல்லாமல் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது. முதல்பாகத்தை விட இன்னும் அதிகமான திகில் நிறைந்த படமாக தயாராகி உள்ளது.
இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி, முத்துக்குமார்,அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம்.சி.ஸ் இசையமைக்கின்றார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
டிமான்டி காலனி 2ம் பாகம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்று திரைக்கு வருவதையொட்டி இப்போது தணிக்கை குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது என அறிவித்துள்ளனர். மேலும், இப்படம் 2 மணி நேர 24 நிமிடங்கள் 16 நொடிகள் நீளமானது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.