நடிகையாக களமிறங்கும் கவுதமி மகள்
ADDED : 439 days ago
ரஜினி - பிரபு இணைந்து நடித்த குரு சிஷ்யன் என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் கவுதமி. அதன் பிறகு கமல், விஜயகாந்த், ராமராஜன் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஒரு பெரிய ரவுண்டு வந்தார். சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டவர் ஒரு குழந்தைக்கு அம்மாவான நிலையில் விவாகரத்து பெற்றார். அதையடுத்து நடிகர் கமல்ஹாசன் உடன் பல வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்தார். கவுதமியின் மகள் சுப்புலட்சுமி சினிமாவில் நடிக்க வருவதாக செய்திகள் வெளியானபோது, அதை அவர் மறுத்து வந்தார். தற்போது தனது மகள் சுப்புலட்சுமிக்கு லண்டனில் நடிப்பு பயிற்சி கொடுத்திருக்கும் கவுதமி, விரைவில் துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு படத்தில் மகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது.