சர்தார் 2 படத்தில் இணையும் மூன்று ஹீரோயின்கள்
ADDED : 439 days ago
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் சர்தார். அப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகத்தை தொடங்கி இருக்கிறார் மித்ரன். இப்படத்தில் கார்த்தியுடன் மோதும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். அதோடு முதல் பாகத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா என மூன்று நாயகிகள் நடித்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் மூன்று நாயகிகள் நடிக்கிறார்கள். பிரியங்கா மோகன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரகுநாத் ஆகிய மூன்று நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.